தங்க விநியோக மோசடி : மறுக்கும் ஹிஸ்புல்லாஹ்

Sri Lanka Politician Crime Ghana Gold M.L.A.M. Hizbullah
By Faarika Faizal Oct 28, 2025 07:13 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

தங்க விநியோகம் தொடர்பான மோசடியில் தாம் 2 மில்லியன் டொலர்களால் ஏமாற்றப்பட்டதாக வெளியான செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மறுத்துள்ளார்.

கானா நாட்டின் ஊடகங்களில் வெளிவந்த குறித்த செய்தி நேற்று இரவு இலங்கை ஊடகங்களிலும் வெளியானது.

இந்நிலையில், அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்று ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது. 

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மோசடி கும்பல் 

அத்துடன், "ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார் என்றும், அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து அந்த நாட்டின் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தங்க விநியோக மோசடி : மறுக்கும் ஹிஸ்புல்லாஹ் | Hizbullah Mp

இந்நிலையில், ஏமாற்ற முயன்றதாக கூறப்படும் 11 பேரையும் கானா நாட்டின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தவிர, ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை.

மேலும், அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம்." என்று அவரின் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.  

You May Like This Video...

 

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

பாதுகாப்பு கோரி சர்வதேசத்தை நாடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்

ஏறாவூரில் போதைப் பொருள் வியாபாரம்: பெண் வியாபாரி கைது

ஏறாவூரில் போதைப் பொருள் வியாபாரம்: பெண் வியாபாரி கைது

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW