அரச உயர் பதவிகளில் உள்ளவர்கள் தவறிழைத்தால் மக்கள் முன் தண்டிக்கப்பட வேண்டும்
அரச உயர் பதவிகளில் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தாமல் தவறாக செயற்படுத்துபவர்கள் மக்கள் முன் நிறுத்தி தண்டிக்கபட வேண்டியவர்ளாகும் என அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ் எம் சபீஸ் கருத்துரைத்துள்ளார்.
கிழக்கின் கேடயம் அமைப்பின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான ஒரு தொகுதி இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று (-3) மாலை எம்.எஸ். லங்கா நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக அதிகாரிகள்
மேலும் தெரிவிக்கையில், “ஒருத்தன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள் ஆக சிறந்த அயோக்கியர்களே. ஒருவர் தனக்கான வேலையில் இருந்து தப்பித்து வாழ்வில் முன்னேற முடியாது.
ஒரு ஏக்கர் நிலத்தை உழுதால் முழுச் சம்பளம் எனும் போது அரை ஏக்கரை உழுது விட்டு முழு சம்பளம் பெறத் துடிக்கின்றனர்.
இன்று நிர்வாக அதிகாரிகளாக இருப்பவர்கள் பலர் மார்க்க அறிவை பூரணமாகவும், குர்ஆன் அறிவை சுமந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் அரசியல்வாதிகளை கண்டால் சுருண்டு காலடியில் படுத்து விடுகின்றனர். அவர்கள் கடமையை துணிச்சலோடு செய்வதற்கு திராணி அற்றவர்களாக காணப்படுகின்றனர்.
இப்படிப்பட்டவர்களால் நாடு ஒருபோதும் முன்னேறாது என்பதால் இவர்கள் பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களே” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |