மருதாணியின் சிறப்புத் தன்மைகள்
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முள்ளான் அடிமைப்பெண் சல்மா உம்முராஃபி(ரளி) அவர்கள் அறிவித்துள்ளதாவது:
நபி(ஸல்) அவர்களுக்கு காயம் ஏற்பட்டால் அல்லது முள் தைத்துவிட்டால் அதன்மீது அவர்கள் மருதாணியை வைக்காமல் இருப்பதில்லை
முதன்முதலாக மருதாணியில் குளிர்ச்சித்தன்மை உள்ளது, இரண்டாவது உலர்வுத்தன்மை உள்ளது.
மருதாணி மரம், அதன் கிளைகள் ஆகியவற்றின் ஆற்றலில் நடுநிலையான சூடான நீர்த்தன்மையின் இயல்பை கொண்டுள்ள வலியை நீக்கக்கூடிய ஆற்றலும், குளிர்ச்சியான நிலத்தன்மையின் இயல்பைக்கொண்டுள்ள வலியை குறைக்கக்கூடிய ஆற்றலும் இணைந்துள்ளன.

மருதாணியின் பயன்கள்
தீக்காயங்களை குணப்படுத்தக்கூடியது, மருதாணி இலையை வைத்து கட்டுப்போட்டால் நரம்புகளுக்கு தேவையான ஆற்றல் அதில் உள்ளதால் அது பயனளிக்கும், அதை வாயில் போட்டு மென்றால் வாய்ப்புண், நாவில் ஏற்பட்டுள்ள புண்கள் ஆகியவை குணமாகும்.
சிறுவர்களுக்கு ஏற்படும் வாய்ப்புண் களையும் குணமாக்குகிறது, கடுமையான வெப்பக்கட்டி, வேனற்கட்டி ஆகியவற்றிற்கு மருதாணி இலையை அரைத்துக் கட்டுப்போட்டால் மிகுந்த பயனளிக்கும்.
தொழுநோய் குணமாக
மருதாணி இலையை தூய்மையான நீரில் ஊறப்போட்டால் அது பொங்கிவரும், பின்பு அதை நன்றாக இறுத்துவிட்டு, அந்த தூய்மையான நீரை மட்டும் நாற்பது நாள்களுக்கு ஒவ்வொரு நாளும் பத்து கிராம் சர்க்கரையுடன் இருபது மில்லி பருகிவர வேண்டும். மேலும் செம்மறியாட்டு கறியை உண்ண வேண்டும், இவ்வாறு செய்தால் ஆரம்ப நிலையிலுள்ள தொழுநோய் குணமாகிவிடும், இது ஓர் ஆச்சரியமான மருத்துவ முறையாகும்.

மருதாணி இலையை அரைத்து நகங்களில் பூசிக்கொண்டால் நகங்கள் அழகுபெறும், மருதாணியை நெய்யோடு கலந்து மஞ்சள் வண்ணச் சீழ் வடியும் வேனற்கட்டி, வீக்கங்கள் மீது கட்டுப்போட்டால் அவை எளிதில் குணமாகும்.
நாள்பட்ட சொறி, சிரங்குகளுக்கு இதைப் பயன்படுத்தினால் மிகுந்த பயனளிக்கும். இது தலைமுடியை முளைக்கச்செய்யும். தலைமுடிகளை வலுப்படுத்தி அழகாக்கும். தலையையும் வலுப்படுத்தும். மருதாணி இலை கை, கால்களில் ஏற்படக்கூடிய, உடலின் வேறு பாகங்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகை கொப்புளங்களுக்கும் கை கண்ட மருந்தாகும்.