உடல் பருமன் குறைய
வெறும் வயிற்றில் தேனும், எலுமிச்சை சாறும் அருந்த வேண்டும். கல்யாண முருங்கை சாறும், தேனும் அருந்த வேண்டும்.
தேன் சாப்பிட்டேன் உடல் எடை குறையவில்லையே எனக்கூறும் பலரை நாம் காணலாம். அதற்கு காரணம் தேன் அல்ல, நமது உணவுப்பழக்கம் சரியில்லை என கூறலாம்.
நமது உடல் என்ன செய்கிறது?
அரிசி, கோதுமை, கிழங்கு போன்ற மாவுப்பொருட்களிலிருந்தும், சர்க்கரை, பழம் போன்றவற்றில் இருந்தும் கிடைக்கும் பொருட்களை குளுகோஸாக மாற்றிக்கொள்கிறது.
உபயோகித்தது போக எஞ்சியதை கிளைகோஜனாக மாற்றி ஈரலில் சேமிக்கிறது, உடம்புக்கு குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் ஈரலில் சேமித்து வைத்ததை உபயோகித்து கொள்கிறது.
ஈரலில் சேமிக்க இடமில்லையென்றால் அவற்றை கொழுப்பாக மாற்றி, வயிறு, தோலின் அடிபாகம் போன்றவற்றில் சேமிக்கிறது.
நாம் உண்ட உணவு செரித்து குளுகோஸாக மாற்றப்பட்டு 50 சதகிவிதம் உடனே சக்தியாக செலவிடப்படுகிறது, எஞ்சிய 40 சதவிகிதம் கொழுப்பாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.
மேலும் நாம் உண்ணும் கொழுப்பு பொருட்களும் கொழுப்பாக(சதையாக) உடல் முழுவதும் சேமிக்கப்படுகிறது.
நமது உடலுக்கு குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, ஈரலில் சேமிக்கப்பட்டதும் காலியானால் அடுத்ததாக கொழுப்பை சக்தியாக மாற்றி காலி செய்கிறது, அதுவும் போதவில்லை என்றால் புரோட்டினை சக்தியாக மாற்றி காலி செய்கிறது, எனவே நாம் மாவுப்பொருட்களையும், கொழுப்பு பொருட்களையும் குறைத்துக்கொண்டால் பற்றாக்குறையின் காரணமாக உடல் முழுவதும் சதையாக குவிந்துகிடக்கும் கொழுப்பை காலி செய்ய ஆரம்பிக்கும்.
இந்த நிகழ்ச்சி துரிதமாக நடக்க தேன் உதவி செய்கிறது, ஒரு டீஸ்பூன் சர்க்கரை 20 கலோரிகளை கொண்டதாகும், ஒரு நாளைக்கு டீ, காபி மூலமாக குறைந்தபட்சம் 240 கலோரிகளை நாம் உடம்பிற்குள் கூட்டிவிடுகிறோம்.
இதை எரித்து காலி செய்ய நாம் ஒரு மணிநேரம் வேகமாக நடக்க வேண்டும், எனவே ஒரு மாதத்திற்குள் சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்துவிட்டு கொழுப்பு பொருட்கள், மாவுப் பொருட்களுக்கு பதிலாக பச்சை காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டு வயிற்றை நிரப்பி தேன் சாப்பிட்டுவிட்டு தினமும் அரைமணிநேரம் நடந்து பாருங்கள், நிச்சயம் உடல் எடை குறையும்.