கொழும்பில் பரபரப்பு! சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞன்
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் முரண்பாடு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார்.
அதற்கமைய, இந்த சம்பவம் குறித்து மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முரண்பாடு
இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வயது சிறுவனும் 3 வயது சிறுமியும் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்களின் நிலையும் நன்றாக இருப்பதாகவும், மருத்துவக் குழுக்கள் சிறுவர்களுக்கு தேவையான சிகிச்சையை வழங்கி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த கொழும்பு 13 ஐச் சேர்ந்த 44 வயது நபர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஜிந்துபிட்டிய, 125 தோட்டம் என்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த ஒரு குழுவினரே துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.