யாழ்.நோக்கி சென்ற கனரக வாகனம் தடம்புரள்வு (Photos)
Sri Lanka Police
Jaffna
Accident
By Fathima
யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கனரக வாகனம் ஏ9 வீதி அருகே முல்லையடி பகுதியில் மின் கம்பத்துடன் மோதி வீடொன்றின் மதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது.
பளை பொலிஸார் விசாரணை
இந்த விபத்து சம்பவமானது இன்று (13.06.2023) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.