முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு

Sri Lankan Peoples Eastern Province Kalmunai Preschool Children Public Health Inspector
By Rakshana MA Mar 03, 2025 11:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

சாய்ந்தமருது(Sainthamaruthu) சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களுக்கான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது இன்று (03) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும், இதன்போது முன்பள்ளிகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்தல் தொடர்பான அறிமுக நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கை

இதன் போது முன்பள்ளிப் பாடசாலைகளை சுகாதார மேம்பாட்டுடைய பாடசாலைகளாக மாற்றுவது சம்பந்தமாகவும், அனைத்து முன்பள்ளி பாடசாலைகளையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்வதன் நன்மைகள் மற்றும் அவசியம் பற்றியும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனால் தெளிவூட்டப்பட்டுள்ளது.

முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கை முன்னெடுப்பு | Health Promotion Activity For Pre School Students

அத்துடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கு அமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜே.பைறூஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நாளுக்கான தங்க விலை நிலவரம்

இன்றைய நாளுக்கான தங்க விலை நிலவரம்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் : ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery