சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார முகாம்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Apr 09, 2025 10:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை - சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 1, தரம் 4 மற்றும் தரம் 7 வரையான மாணவர்களுக்கான சுகாதார முகாம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது உடல் நிறை குறியீட்டெண் (BMI), பார்வை மற்றும் பல் என்பன பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஸஹீலா இஸ்ஸதீனின் பணிப்புக்கு அமைய, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் ஆலோசனையின் பேரில் நடைபெற்றுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

சுகாதார முகாம்

இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற் சிகிச்சையாளர், மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியிருந்தனர். 

அதே போன்று சாய்ந்தமருது கமு/கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பாடசாலைகளில் சுகாதார முகாம் | Health Camps At Sainthamaruthu Schools

இதன்போது பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பரிசோதிக்கப்பட்டு அது தரமற்றதாக காணப்பட்டதால் அவ் உணவை தயாரித்த நபருக்கு தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்களும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

துபாயில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை

துபாயில் இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை

பொது சேவையில் 30,000 பேரை சேர்த்துக் கொள்ள தீர்மானம்

பொது சேவையில் 30,000 பேரை சேர்த்துக் கொள்ள தீர்மானம்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery