ஹட்டனில் டிப்பர் வாகனம் மோதி விபத்து - சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் - புலியாவத்தை பிரதான வீதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(05.10.2026) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி படுகாயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
டிக்கோயா - தரவளை பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

அதன் பின்னர், அங்கிருந்தவர்களால் சாரதி டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும், பால் ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதிய காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், லொறி அதிக வேகத்தில் பயணித்த நிலையில், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், விபத்தில் இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
