பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள்

Sri Lanka Harini Amarasuriya National Health Service
By Laksi Nov 01, 2024 10:52 AM GMT
Laksi

Laksi

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, தாதியர் சேவையை சிறந்த முறையில், தரமானதாகவும், செயற்திறனுடனும் முன்னெடுத்துச் செல்வதில் சமகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் தொடர்பில் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன.

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

தாதியர் பற்றாக்குறை

அத்தோடு, தாதியர் கல்வி உலகளாவிய தேவைக்கமைய புதுப்பிக்கப்படாமை, தாதியர் யாப்பு, சேவை யாப்புகளில் காணப்படும் பிரச்சினைகள், தாதியர் சபை, கடந்த கால அரசாங்கங்களின் புறக்கணிப்பு, தாதியொருவர் உயிரிழக்கின்றமை, தாதியர் பற்றாக்குறை, தாதியர் சேவை நாடளாவிய ரீதியிலான சேவையாக காணப்படாமை, சமூக சுகாதார தாதியர் சேவை உரிய முறையில் ஸ்தாபிக்கப்படாமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் | Harini Meet For All Ceylon Nursing Service Union

மேலும் ,நாட்டின் அபிவிருத்திக்கென நேரடியாக தாதியர் சேவையை பயன்பாட்டிற்கு எடுக்காமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சங்கத்தின் பிரதிநிதிகள் இதன்போது கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் ஜீ.பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் வைத்தியர் அசங்க விக்ரமசிங்க, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பிரதம செயலாளர் என்.பீ.மெதவத்த, தலைவர் ரவிந்த்ர கஹதவ ஆரச்சி, ஒருங்கிணைப்பு செயலாளர் அமில ரத்னாயக்க, பொருளாலர் சுரேன் தவுலகல, கல்வி செயலாளர் பிரபாத் பிலிபான, உப தலைவர் சஞ்ஜீவ முணசிங்க, உப செயலாளர் சமன் விஜேதிலக்க உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் குறித்த சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

முப்படையினரின் சம்பள அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முப்படையினரின் சம்பள அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW