பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளியிட்ட அறிவிப்பு
2019 முதல் 2024 வரை வாபஸ் பெறப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 102. இவற்றில் 65 மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், அவற்றில் 34 வழக்குகளை மீண்டும் தொடர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் மூன்று வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
வழக்குகள்
தற்போது நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

15 அல்லது 20 ஆண்டுகள் பழமையான வழக்குகளை மீண்டும் விசாரித்தே தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு சிறிது நேரம் எடுக்கும். வழக்குகளை தேர்ந்தெடுத்து மீள தொடுக்கவில்லை.
வழக்குகளில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அரசாங்கம் யாரையும் எந்த வகையிலும் பாதுகாக்கவில்லை.
அரசாங்கம் நீதித்துறை செயல்முறையை முறையாக நடத்தும்போது, கடந்த அரசாங்கங்களில் ஒருவரையொருவர் பாதுகாத்தவர்கள் இன்று எங்களிடம் கேட்கும் இவ்வாறான கேள்விகள் நகைச்சுவையாக உள்ளது.