அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹரின் பெர்ணான்டோ

Manusha Nanayakkara Samagi Jana Balawegaya Harin Fernando
By Shadhu Shanker Aug 09, 2024 09:18 AM GMT

ஹரின் பெர்ணான்டோ அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) மற்றும் மனுஷ நாணயக்கார (Manush Nanayakkara) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அரசாங்கத்திற்கு ஆதரவளித்தனர்.

இதனால் இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சர்கள் இருவரையும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தியிருந்தது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஹரின் பெர்ணாண்டோ

இதற்கு எதிராக மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ஹரின் பெர்ணான்டோ | Harin Fernando Resigns From Minister Post

குறித்த மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதி குறித்து வெளியான தகவல்

முட்டை இறக்குமதி குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW