திருகோணமலையில் கடினப் பந்து விளையாட்டு தொடர்பில் நடவடிக்கை
இம்ரான் மகரூப் கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர், கடந்த ஜூலை 4ஆம் திகதி கிண்ணியா எழில் அரங்கு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
திருகோணமலை மாவட்டத்தில் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி, மாவட்டத்தின் மறைந்திருக்கும் திறமையான இளம் வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களுக்கு இட்டுச் செல்லும் உயரிய நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலும் முழுமையான அனுசரணையிலும் இந்தத் தொடர், முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், நகர சபைத் தலைவர், பொலிஸ் உயர் அதிகாரிகள், கிரிக்கெட் சபை நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.