ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பதவி

Anura Kumara Dissanayaka Sri Lanka Government Economy of Sri Lanka
By Laksi Nov 01, 2024 04:24 PM GMT
Laksi

Laksi

ஆக்சியாட்டா (Axiata) குழுமத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய (Hans Wijayasuriya) டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.

குறித்த நியமனமானது  இன்று (01) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடமிருந்து கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

டிஜிட்டல் தீர்வுகளில் அனுபவம் 

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க முதல் படியாக இந்த நியமனம் அமைவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. 

ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள பதவி | Hans Wijayasuriya Appoint President Chief Advisor

மேலும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் அனுபவம் வாய்ந்த விஜயசூரிய, பல்வேறு துறைகளில் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும், இணைப்பை மேம்படுத்தும் மற்றும் பொருளாதார நவீனமயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளை  முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW