எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைவரிசை; CCTV கமெரா வில் சிக்கிய நபர்கள்
Colombo
Sri Lanka
By Nafeel
கொள்ளுப்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வந்த இருவர் வைவரிசையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதன்போது அங்கிருந்த 71,000 ரூபாவை திருடிய குற்றச்சாட்டில் அந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபர்களுடன் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் திருடப்பட்ட பணத்தில் 45,000 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்பவர் எனவும் மற்றையவர் மோட்டார் சைக்கிள் பழுதுபார்ப்பவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.