பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lankan Schools School Children
By Mayuri Oct 04, 2024 03:33 AM GMT

பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கை, கால் மற்றும் வாய் நோய்

அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளை முகக்கவசம் அணியச் செய்யுமாறு சுகாதாரத் துறைகள் பெற்றோரை வலியுறுத்துகின்றன.

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம்! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Hand Foot And Mouth Disease

கை, கால் மற்றும் வாய் நோய் உள்ள குழந்தைகளும் இந்நாட்களில் பதிவாகி வருவதாகவும், எனவே சரியான சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என குழந்தை நல மருத்துவர் டிபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW