நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்: விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்
Parliament of Sri Lanka
Ministry of Defense Sri Lanka
By Mayuri
ரிப்பீட்டர் ரகத் துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிக்கு மேலதிகமாக ரிப்பீட்டர் ரகத் துப்பாக்கியை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிப்பு
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் ரிப்பீட்டர் ரகத் துப்பாக்கிகளை வழங்க முடியுமெனப் பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |