கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
Colombo Stock Exchange
Economy of Sri Lanka
By Laksi
3 months ago

Laksi
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களும் இன்றையதினம் (13) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
மொத்த புரள்வு
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.1 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (12) வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |