அச்சுறுத்தலாக மாறியுள்ளது 'க்ரோக்' ஏஐ தொழில்நுட்பம்
எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட க்ரோக் (Grok) செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் பொதுப் பிராலங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கலாநிதி சஞ்சன அத்தொட்டுவ தெரிவித்துள்ளார்.
அவர் இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''இத்தளம் மூலம் அனுமதியின்றி ஏனையவர்களின் படங்களைப் பயன்படுத்தி வன்முறையான உள்ளடக்கங்களை மிக இலகுவாக உருவாக்க முடியும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
பெண் அரசியல்வாதிகள்
இலங்கையின் பெண் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இதுபோன்ற போலிப் படங்கள் உருவாக்கப்படும் அபாயம் உள்ளது.

சர்வதேச அளவில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இது குறித்து சட்டரீதியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
எனவே தனிநபர்கள் தங்களின் டிஜிட்டல் தடயங்களைக் குறைத்துக்கொள்ளவும், சமூக வலைதளப் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு அச்சுறுத்தல்
தொழில்நுட்ப நிறுவனங்கள் இலாபத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம் ஒன்றாகும்.

எலோன் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குரோக் (Grok) ஏஐ தொழில்நுட்பம், பெண்களின் பொதுவெளிப் படங்களைப் பயன்படுத்தி பல்வேறு அச்சுறுத்தலான மற்றும் தரக் குறைவான உள்ளடக்கங்களை உருவாக்குகிறது" என கூறியுள்ளார்.