சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி

Sri Lanka Saudi Arabia
By Rakshana MA Nov 06, 2024 01:14 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தினூடாக கடந்த வருடம் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியை இம்முறையும் மிகப் பிரமாண்டமாக நடத்த சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சினால் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று (05) சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல்கஹ்தாணி மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பொறுப்புதாரர்களுக்கு இடையில் கொழும்பில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த மனனப்போட்டியின் 2வது கட்டம் 2025 ஆம் ஆண்டில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே இப்பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மாபெரும் மனனப்போட்டி

இக்கலந்துரையாடலின் முதற்கட்டம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுள்ளது.

இதன் போது திணைக்களத்தின் சார்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மதப் பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் என். நிலோபர் மற்றும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.எம். முப்தி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி | Grand Quran Recitation Contest By Saudi Govt 2025

மேலும் இறுதிப்போட்டிகான தெரிவுகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சானது, இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதரகத்தினூடாக வரலாறு காணாத மாபெரும் அல்குர்ஆன் மனனப் போட்டியொன்றை கடந்த 2023 ஜுன் 15ஆம் திகதி கொழும்பிலுள்ள மூவன்பிக் ஹோட்டல் ( Movenpick Hotel) லில் முன்னெடுத்திருந்தது.

மேலும் இப் போட்டிக்கான பரிசில்கள் வழங்கும் விழாவும் ஷங்கிரிலா ஹோட்டல் (ShangriLa Hotel)இலும் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.

சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி | Grand Quran Recitation Contest By Saudi Govt 2025

அதுமட்டுமல்லாமல், குறித்த போட்டி வருடா வருடம் நடைபெற வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி அரேபியாவின் முஸ்லிம் விவகார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கேட்டுக் கொண்டதற்கு அமைய, இப்போட்டியினை வருடா வருடம் நடத்துவதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இப்போட்டியை நடத்த தற்போது நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள்

குப்ர் எனும் இணைவைத்தல்!! இஸ்லாத்தின் அறிய வேண்டிய விடயங்கள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW