புத்தளம் தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா
புத்தளம்(Puttalam) தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் 3ஆவது ஆண்டு அல் - ஆலிம், அல் - ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழாவும், கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளி விழாவும் கொண்டாடப்பட்டுள்ளது.
குறித்த இந்த நிகழ்வானது, நேற்றைய தினம்(09) கலாசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பட்டமளிப்பு..
இந்த நிகழ்வானது கலாசாலையின் அதிபரும், நிறுவுனருமான மௌலவி அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம்.ஏ.முபாரக் றஷாதின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில், பிரதம பேச்சாளராக அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் றிஸ்வி முப்தி கலந்துகொண்டதுடன், பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் அதமும், கெளரவ அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீனும், அதிதிகளாக, முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், வடமேல் மாகாண முன்னாள் உறுப்பினர் என்.ரீ.தாஹிர், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ் நசீர் உள்ளிட்ட அரசில் பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வில் பட்டமளிப்பு பெறும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










