தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் காலம் அறிவிப்பு
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுபாஷினி லியனகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பரீட்சை தொடர்பிலான எவ்விதமான முறைப்பாடுகள் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள்
இதுவரையில் முறைகேடுகள் தொடர்பிலோ அல்லது ஏதேனும் சம்பவங்கள் தொடர்பிலும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை மிகவும் சிறந்த முறையில் நடைபெற்றது எனக் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் முதல் ஆரம்ப கட்ட பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி முதல் 27ம் திகத வரையில் ஆறு நாட்கள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை 2788 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றதாகத் தெரிவித்துள்ளார்.