லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
இலங்கையில் தற்போது லிட்ரோ நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டினை அறிவிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை, நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு விலையில் திருத்தம்
மேலும், உலக சந்தையின் விலைகளுக்கு ஏற்ப, நாட்டின் எரிவாயு விலையினை திருத்துவதற்கான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே, லிட்ரோ நிறுவனம் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் தமது நிலைப்பாட்டினை அரசாங்கம் அறிவிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் கடந்த மாதம் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு ஏற்ப புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |