க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து வெளியாகிய தகவல்

Sri Lanka G.C.E. (O/L) Examination Education
By Thahir Apr 25, 2023 06:27 AM GMT
Thahir

Thahir

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (25.04.2023) இடம்பெற்ற போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி மே மாதம் 29ஆம் திகதி நிச்சயம் இடம்பெறுமென கல்வி அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து வெளியாகிய தகவல் | Government Regarding G C Eordinary Level Exam

கல்வி முறை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதில் பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.

வெளிநாடுகளில் 20 வயதுக்குள் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்யக் கூடியவாறான கல்வி முறைமையே காணப்படுகிறது. ஆனால் இலங்கையில் இதற்காக 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டியுள்ளது.

எனவே சாதாரண , உயர் பரீட்சைகளும் , பெருபேருகளை வெளியிடலும் தாமதடைந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கும்.

க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து வெளியாகிய தகவல் | Government Regarding G C Eordinary Level Exam

விசேட கலந்துரையாடல்

இதனைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பரீட்சைகள் ஆணையாளர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெற்றிகரமாக விரைவில் முழுமையாக ஆரம்பமாகும் என கூறியுள்ளார்.