மூடப்படவுள்ள சில அரசாங்க நிறுவனங்கள்..!
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
Nalinda Jayatissa
By Rukshy
மக்களுக்கு பயனில்லாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பலபிட்டிய தபால் நிலையக் கட்டிடக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிணைக்க முயற்சி
மேலும் கூறுகையில், “நமது நாட்டில் சில அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்வதில்லை. சில அரசு நிறுவனங்களில், ஒன்று அல்லது இரண்டு அதிகாரிகள் மட்டுமே பணிபுரிகின்றனர்.
இவ்வாறு, மக்களுக்கு சேவை செய்யாத அரசாங்க நிறுவனங்களை மூடுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
அத்துடன், சில நிறுவனங்களை ஒன்றிணைக்க முயற்சித்து வருகின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.