பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 18ஆம் திகதி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாசா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் நேற்று (10) இடம்பெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கூட்டத்தின் போது எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
பதுளை பொது வைத்தியசாலையில் சேவையாற்றும் தமது சங்கத்தின் பிரதி செயலாளர் பாலித்த ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தக் கோரி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.
இதேவேளை, இன்று (11) முதல் நாடளாவிய ரீதியாகவுள்ள சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக் கொடி பறக்கவிடத் தீர்மானிக்கப்பட்டதாகவும் வைத்தியர் பிரபாத் சுகததாசா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |