அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Government Employee Sri Lanka Government Of Sri Lanka Money
By Dhayani Apr 03, 2023 12:58 AM GMT
Dhayani

Dhayani

அரச ஊழியர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் மாதம் சகல மக்களுக்குமான பண்டிகை மாதம் என்பதனால் இந்தப் பண்டிகைக் காலத்தில் அதிக செலவுகள் ஏற்படுவது இயல்பாகும்.

எனவே கடன் பெற்ற அரச ஊழியர்களின் கடன் கழிப்பனவுகளை தொகை பண்டிகையை கொண்டாட போதுமானதாக இல்லை என பெரும்பாலான அரச ஊழியர்கள் தனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Government Employee Salary In Srilanka

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Government Employee Salary In Srilanka

எனவே, இதனை கவனத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்துக்கான கடன் கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளும் மேற்படி திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.