ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பான அறிவிப்பு

Government Employee Government Of Sri Lanka Sri Lanka Government
By Fathima May 03, 2023 06:42 AM GMT
Fathima

Fathima

2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இன்று(03.05.2023) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  

மீண்டும் சேவையில்

உள்ளூராட்சிமன்ற தேர்தலலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் தொடர்பான அறிவிப்பு | Government Employee Government Staffs Sri Lanka

இதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர்களுக்கு உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now