சீரற்ற காலநிலையால் திருகோணமலையில் இடிந்து விழுந்த கட்டடம்
சீரற்ற காலநிலையால் திருகோணமலையில் இடிந்து விழுந்த கட்டிடம் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் திருகோணமலை- வெள்ளைமணல் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பல்தேவைக் கட்டிடம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவமானது நேற்று (26) சின்னம்பிள்ளைச்சேனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி, முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய பகுதியும் எந்த நேரமும் விடிந்து விடக்கூடிய, ஆபத்தான நிலையில் இருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடத் தொகுதியின் மீதியுள்ள பகுதியும் ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் எவரும் உட்பிரவேசிக்க வேண்டாம் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் பிரதேச சுகாதாரப் பராமரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த கட்டிடத்தில் கிராம சேவகர் அலுவலகம், பிரதேச மாதர் அபிவிருத்தி நிலையம், குடிசை கைத்தொழில் பயிற்சி நிலையம், பிரதேச கடற்றொழில் சங்க அலுவலகம் ஆகியன இயங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |