விவசாயிகளுக்கான சலுகை தொடர்பில் அமைச்சு வெளியிட்ட தகவல்

Advanced Agri Farmers Mission Sri Lanka Politician Government Of Sri Lanka Ministry of Agriculture
By Fathima May 03, 2023 01:46 PM GMT
Fathima

Fathima

மியூரேட் ஒஃப் பொட்டாஷ் உரம் மற்றும் யூரியா உரங்களை போதிய அளவில் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03.05.2023) புதன்கிழமை இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

[H8PRVL ]

அரசாங்கம் வழங்கிய உர மானியங்களை முன்னர் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு உரம் மானியம்

விவசாயிகளுக்கான சலுகை தொடர்பில் அமைச்சு வெளியிட்ட தகவல் | Government About Fertilizer Distribution

இதன்படி, விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.

இந்நிலையைில் இம்முறை பெரும்போகத்தின் போது விவசாயிகள் விருப்பத்திற்கு ஏற்ப யூரியா உரத்தினை கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.