மீண்டும் தங்க விலையில் மாற்றம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA Jun 11, 2025 06:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலையானது இன்று (11) சடுதியாக 9000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது கடந்த நாட்களில் 990,433 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 999,054 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் AI தொழிநுட்பத்தின் முறையற்ற பயன்பாடு : 2 நபர்கள் கைது

இலங்கையில் AI தொழிநுட்பத்தின் முறையற்ற பயன்பாடு : 2 நபர்கள் கைது

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,250 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 281,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மீண்டும் தங்க விலையில் மாற்றம் | Gold Price Today In Srilanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,320 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 258,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,850 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 246,750 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

செட்டியார் தெரு தங்க விலை

அத்துடன், செட்டியார் தெருவின் தங்க விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் அண்ணளவாக 1200 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 264,000  ரூபாவாக பதிவாகியுள்ளது.

மீண்டும் தங்க விலையில் மாற்றம் | Gold Price Today In Srilanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 244,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை கலால் வருவாய் மாற்றம்

2025ஆம் ஆண்டிற்கான இலங்கை கலால் வருவாய் மாற்றம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW