அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA May 29, 2025 06:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (29) சடுதியான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 993,831 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று  980,523ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

திருகோணமலைக்கு புதிய மேயர் தெரிவு

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,590 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 276,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,710 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 253,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,270 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 242,150 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

செட்டியார் தெரு தங்க விலை

அத்துடன், செட்டியார் தெருவின் தங்க விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அண்ணளவாக 1000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 262,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 242,300 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW