சடுதியாக அதிகரித்த தங்க விலை!
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (10) அண்ணளவாக 40,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு அவுன்ஸ் 899,105 ரூபாவாக காணப்பட்ட தங்க விலையானது, இன்றைய தினம் 939,057 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூபா 31,720 இலிருந்து 33,130 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 265,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,080ரூபாவிலிருந்து 30,370 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 243,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை ரூபா 27,760 ரூபாவிலிருந்து 28,990 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 231,950 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
செட்டியார் தெரு தங்க விலை
அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 243,000 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் 253,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது நேற்றைய தினம் 223,500 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்று 232,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |