தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Gold Price in Sri Lanka Today Gold Price Gold
By Fathima Jan 28, 2026 06:05 AM GMT
Fathima

Fathima

இன்று காலை கொழும்பு தங்கச் சந்தை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, தங்கத்தின் மொத்த விலை ரூ.10,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை ரூ.374,600 ஆக பதிவாகியுள்ளது.

விலை குறையும் 

இதே நேரத்தில், நேற்று ரூ.394,000 ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று ரூ.405,000 ஆக அதிகரித்துள்ளதாக தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Gold Price Increase

இதேவேளை, தங்கம் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நகை வாங்குபவர்கள் விலை குறையும் வரை காத்திருக்கலாம் என்று ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக சர்வதேச சந்தை போக்கு மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்படுகின்றது.