நாளையதினம் வேலை நிறுத்தத்தில் குதிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
GMOA Sri Lanka
Hospitals in Sri Lanka
Strike Sri Lanka
By Independent Writer
தன்னிச்சையான இடமாற்ற முறையை எதிர்த்து, நாளை (31) நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்கப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்(gmoa) தெரிவித்துள்ளது.
இந்த இடமாற்ற முறை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவைகள் முடங்குவதற்கான பொறுப்பை அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொழிற்சங்க நடவடிக்கை
சம்பந்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக நேற்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாச இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |