நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு

Sri Lanka Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka
By Laksi Sep 17, 2024 11:11 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் நாளை (18) அனைத்து வைத்தியசாலைகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இதனால், நோயாளிகளின் சிகிச்சைக்கு இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியினர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்: ரிஷாட் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியினர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும்: ரிஷாட் பகிரங்கம்

பணிப்புறக்கணிப்பு

பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச தொடர்பில் முறையான முறைப்பாடு எதுவுமின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று விசாரணைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு | Gmoa On Nationwide Strike Tomorrow

சம்பவம் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய சுகாதார அமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் சாதகமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், மத்திய நிலையத்தின் கூட்டத்தின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அம்பாறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்தரங்கு நிகழ்வு

அம்பாறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கருத்தரங்கு நிகழ்வு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW