பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பொலிஸ் திணைக்களம் விசேட பாதுகாப்புத் திட்டத்தை வகுத்துள்ளது.
அதன்படி, இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 10,500 பேர் முப்படையைச் சேர்ந்த கூடுதல் அதிகாரிகளின் ஆதரவுடன், பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 52 வாக்கு எண்ணும் மையங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் உட்பட நாடு முழுவதும் 131 வீதி தடுப்புகளை இதுவரை பாதுகாப்பு அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
தேர்தல் ஏற்பாடுகள்
இதனையடுத்து, நவம்பர் 15ஆம் திகதியன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு வெளியாகிவிடும்.
இந்தநிலையில், இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, பொதுத் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |