பொதுத்தேர்தல் தொடர்பில் நாளை முக்கிய கலந்துரையாடல்
Election Commission of Sri Lanka
Sri Lanka
General Election 2024
By Laksi
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலானது நாளை (15) காலை 9.30 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடல்
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கலந்துரையாடலின் போது ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகையும் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |