மண்சரிவில் சிக்கிய ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரத்தினக்கலால் பரபரப்பு! ஆர்வமுடன் பார்வையிடும் மக்கள்

Sri Lanka Sri Lankan Peoples
By Shadhu Shanker Jan 20, 2026 02:30 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

அண்மையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா – தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில், வித்தியாசமான பிரகாசத்துடன் ஒளிர்ந்த கற்பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத்தில் திடீரென பிரகாசமாக ஒளிர்வதை கவனித்த தோட்ட மக்கள், அருகில் சென்று பார்வையிட்ட போது அது ரத்தினக் கல்லாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெரும் பரபரப்பு

இதனைத் தொடர்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மண்சரிவில் சிக்கிய ஆலயத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட இரத்தினக்கலால் பரபரப்பு! ஆர்வமுடன் பார்வையிடும் மக்கள் | Gemstone Discovered Temple Trapped Landslide

இதனிடையே, இந்த நிகழ்வை “ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயமான சம்பவம்” எனக் கருதி பிரதேச மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த மர்மக் கண்டுபிடிப்பு, கலஹா – தெல்தொட்டை பகுதியிலுள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

GalleryGalleryGalleryGallery