பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

By Thulsi May 03, 2024 05:44 AM GMT

இலங்கையில் இந்த வருடத்தின் (2024) முதலாம் தவணைக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு (Sri Lankan Ministry of Education) வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்ட விடுமுறை இன்று (03) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை

அதேவேளை, மே மாதம் 19ஆம் திகதி அன்று விடுமுறை முடிவடைந்து மே மாதம் 20 ஆம் திகதி திங்களன்று முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல் | Gce Ol Examination And School Holiday

பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்ட பின் மே மாதம் 22 ஆம் திகதி முதல் தவணைப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிடையில் கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 15 ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.