22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான வர்த்தமானி அறிவித்தல்
Ranil Wickremesinghe
President of Sri lanka
Law and Order
By DiasA
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) உத்தரவின் பேரில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் (gazette) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (19.7.2024) சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
வார்த்தை திருத்தம்
இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான அரசியலமைப்பின் 83 (ஆ) சரத்தில் '6 வருடங்களுக்கு மேல்' என்ற சொற் தொடருக்கு பதிலாக '5 ஆண்டுகளுக்கு மேல்' என்ற வார்த்தை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச வர்த்தமானியில் வெளியிடுவதைத் தவிர்ப்பதாக நேற்று (18) அறிவித்ததன் பின்னணியில் ஜனாதிபதியினால் இன்று வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |