காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரவேற்கும் சர்வதேசம்

United Nations Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 09, 2025 04:30 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

காசாவில் போர்நிறுத்தம் மற்றும் சிறைக்கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் எட்டப்பட்ட இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மற்றும் அதற்கான முயற்சியில் அமெரிக்கா, கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகள் மேற்கொண்ட தூதரக முயற்சிகளையும் பாராட்டுகிறேன்.

இஸ்ரேல் : காசா போர் நிறுத்தம் - அமைதி திட்டத்துக்கு ஒப்புதல்

இஸ்ரேல் : காசா போர் நிறுத்தம் - அமைதி திட்டத்துக்கு ஒப்புதல்

விதிமுறை

ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் பங்கேற்பாளர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரவேற்கும் சர்வதேசம் | Gaza Ceasefire Agreement

அனைத்து சிறைக் கைதிகளும் மரியாதைக்குரிய முறையில் விடுவிக்கப்பட வேண்டும்.

நிரந்தர போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட வேண்டும், இப்போருக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். 

யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்

யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்

உதவிகள்

மனிதாபிமான உதவிகள் மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்கள் காசாவுக்குள் தடையின்றி உடனடியாக நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் முழுமையான நடைமுறைக்கு ஆதரவு அளிக்கும்.

நிலையான மற்றும் நெறிமுறையுடன் கூடிய மனிதாபிமான உதவிகளை அதிகரிப்போம்.

பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு: ஐ.நாவில் இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் இனப்படுகொலை செய்யும் நாடு: ஐ.நாவில் இந்தியா கண்டனம்

மீள்நிர்மாணம்

அத்தோடு காசாவின் மீள்நிர்மாணம் மற்றும் மீட்சிக்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.  

காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரவேற்கும் சர்வதேசம் | Gaza Ceasefire Agreement

இந்த அமைதி ஒப்பந்தம் இஸ்ரேலியரும் மற்றும் பலஸ்தீனரும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் இணைந்து வாழக்கூடிய இரு நாடு தீர்வுக்கான தொடக்கமாக அமைய வேண்டும்.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் அத்தோடு பலஸ்தீன மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிப்புக்கு முடிவுகொடுக்கக் கூடிய நம்பகமான அரசியல் பாதையை உருவாக்க அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

2 வருட இனப்படுகொலையில் காசாவில் 254 ஊடகவியலாளர்கள் தியாகிகள்

2 வருட இனப்படுகொலையில் காசாவில் 254 ஊடகவியலாளர்கள் தியாகிகள்

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

இஸ்ரேல் சிறையில் சித்திரவதை: ஸ்வீடன் ஆர்வலரின் அதிர்ச்சி அறிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW