நபிவழி மருத்துவம் பூண்டு
இது வெங்காயத்தை ஒத்தது ஆகும், நபிமொழியில் வந்துள்ளதாவது: அவ்விரண்டையும்(வெங்காயம், பூண்டு) யார் உண்பாரோ அவர் அவற்றை சமைப்பதன் மூலம் வீரியம் இழக்கச் செய்யட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு தடவை நபி(ஸல்) அவர்களுக்கு உணவு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் பூண்டும் இருந்தது.
எனவே அதை அவர்கள் அபூஅய்யூப் அல்அன்ஸாரீ(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
அப்போது அவர்கள், ”அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் விரும்பவில்லையா, என்னிடம் இதை அனுப்பிவிட்டீர்களே?” என கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் ”நீங்கள் உரையாடாதவரோடு நான் உரையாடுகிறேன்(அந்த வாடை அவரை சிரமப்படுத்தும்)” என்று கூறினார்கள்.
இது காய்வுத்தன்மை கொண்ட நான்காம் நிலை வெப்பத்தன்மை கொண்டதாகும். முற்றிலுமான சூட்டை ஏற்படுத்தும்.
மேலும் குளிர்காய்ச்சல் உடையோருக்கு பயனுள்ளது, இயல்பாகவே சளி உள்ளோருக்கு சிறந்தது, வாதத்தில் படுத்தவருக்கு உகந்தது.
இது இந்திரியத் துளியை கெட்டியாக்குகிறது, இரத்தநாள அடைப்புகளை திறந்துவிடுகிறது, கடுமையான வாய்வுதனை நீக்குகிறது.
உணவை நன்றாக செரிக்க வைக்கிறது, தாகத்தை தணிக்கிறது, வயிற்றை சுத்தம் செய்கிறது, சிறுநீர் நன்றாக பிரியச் செய்கிறது, தொல்லைதரக்கூடிய பூச்சியினங்களின் கடிகளுக்கும் அனைத்துவிதக் கட்டிகளுக்கும் நோய்எதிர்ப்பு மருந்தை போன்றதாகும்.
பூண்டை தட்டி பாம்பு கடிக்கும் அல்லது தேள் கடிக்கும் கட்டுப்போட்டால் மிகுந்த பயனளிக்கும். அவற்றில் இருந்து நஞ்சை உறிஞ்சிவிடும். உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும். ஏற்கனவே உள்ள சூட்டை அதிகரிக்கும்.
சளியை கரைத்து குறட்டைவிடுவதை நீக்கும், தொண்டையை சுத்தமாக்கும். தண்ணீர் மாற்றி அருந்துவோருக்கும் பயனளிக்கும், நாள்பட்ட இருமலையும் குணமாக்கும், இதை பச்சையாகவும் சமைத்தும் பொரித்தும் சாப்பிடலாம். குளிர்ச்சியால் ஏற்படுகின்ற நெஞ்சுவலியையும் இது குணப்படுத்தும்.
தொண்டையிலுள்ள ரத்தகட்டியை நீக்கும், காடி, உப்பு, தேன் ஆகியவற்றோடு சேர்த்து தட்டி, சொத்தையான கடைவாய்ப்ல்லில் வைத்தால் அதை துண்டு துண்டாக்கி விழச்செய்துவிடும்.
இரண்டு பாக்கு அளவு எடுத்து தட்டி தேன்தண்ணீரோடு கலந்து சாப்பிட்டால் சளியையும் புழுக்களையும் வெளியேற்றிவிடும், உடலில் உள்ள தோல்நோய் மீது தேனோடு பூண்டை தடவினால் பயனளிக்கும்.
தீங்குகள்
இது தலைவலியை உண்டாக்கும், மூளையையும் கண்களையும் பாதிக்கும், பார்வைத்திறனையும் போக ஆற்றலையும் பலவீனப்படுத்தும், தாகத்தை ஏற்படுத்தும், மஞ்சள்காமாலையை தூண்டும், வாய்வாடையை உண்டு பண்ணி நாற்றமடிக்கச்செய்யும்.