கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுதலை
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம்- நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பொதுத் தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (24) யாழ். நெல்லியடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது
யாழில் சட்டவிரோதமாக துண்டுப்பிரசுரம் விநியோகித்த குற்றச்சாட்டில் பேரில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |