மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Chandramathi Jun 09, 2023 04:41 PM GMT
Chandramathi

Chandramathi

சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கை உயர்தர பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவடைந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (08.06.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.   

பரீட்சையின் மதிப்பீடு

மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | G C E O L Exam Results 2023

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று(08.06.2023) வரை நடைபெற்றது.

மேலும் இம்முறை சாதாரண தரப் பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது.