க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Rakshana MA Mar 28, 2025 05:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தகவல் வெளியாகியுள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

கியாமுல்-லைல் தொழுகையில் இறையடி சேர்ந்த இளைஞர்!

உயர்தரப் பரீட்சை

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்பட்டது.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல் | G C E Advanced Level Exam Results Released

இந்த பரீட்ச்சைக்கு, 333,183 பேரில் பாடசாலை பரீட்சார்த்திகள் 253, 380 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 79, 795 பேரும் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதான பரீட்சைத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.  

கல்முனையில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவகங்கள்! எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

கல்முனையில் நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவகங்கள்! எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

டெங்கு ஒழிப்பு சிறப்பு திட்டம் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு சிறப்பு திட்டம் முன்னெடுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW