இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டட புனரமைப்பு ஆரம்பித்து வைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.முகம்மட் ஹரீஸின் முயற்சியின் பயனாக ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கட்டட மேல்தளமானது 4.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் எச்.எம்.முகம்மட் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை நம்பிக்கையாளர் சபையினரிடம் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.எல்.முஸ்னி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எஸ்.எல் நிஷார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ பாவா, வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், சிரேஷ்ட ஆலோசகர் எம்.ஏ. கலீல் ரஹ்மான், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், ஜமாஅத்தினர், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.