மன்னாருக்கு விஜயம் செய்துள்ள சஜித் வழங்கியுள்ள உறுதி

Mannar Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Mayuri Jul 15, 2024 12:26 PM GMT
Mayuri

Mayuri

நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மன்னாருக்கான விஜயத்தை இன்று (15) மேற்கொண்ட சஜித், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் ஒரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது. முக்கியமாக நாட்டின் நீதிப்புத்தகத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவேன்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினை

மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளேன்.

மன்னாருக்கு விஜயம் செய்துள்ள சஜித் வழங்கியுள்ள உறுதி | Fully Implement 13Th Amendment Sajith

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன். 

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, இந்த நாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.

நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்நிலையில், மாகாணசபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.  

GalleryGalleryGallery