எரிபொருள் QR குறியீடு : பழைய தொலைபேசி இலக்கங்களை மாற்ற புதிய வசதி அறிமுகம்!

Ceylon Petroleum Corporation Sri Lanka QR Code
By Amal Mar 20, 2026 03:48 AM GMT
Amal

Amal

தமது வாகனங்களுக்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தற்போது கைவசம் இல்லாத அல்லது செயலிழந்த நிலையில் உள்ள வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2026 மார்ச் 14ஆம் திகதிக்கு முன்னர் எரிபொருள் QR முறைமையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு இந்த புதிய வசதி பொருந்தும்.

ஈழத் தமிழர்களுக்கு நடந்தது என்ன : ஈரானுக்கு நடக்கப் போவது என்ன..!

ஈழத் தமிழர்களுக்கு நடந்தது என்ன : ஈரானுக்கு நடக்கப் போவது என்ன..!

பழைய தொலைபேசி இலக்கத்திலான கணக்கு

பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கம் தற்போது உங்களிடம் இல்லை என்றாலோ அல்லது அது வேறொருவருடையது என்றாலோ இந்த மாற்றத்தைச் செய்யலாம்.

எரிபொருள் QR குறியீடு : பழைய தொலைபேசி இலக்கங்களை மாற்ற புதிய வசதி அறிமுகம்! | Fuel Qr Code New Facility Change Old Phone Numbers

வாகன உரிமையாளர்கள் அதிகார பூர்வ இணையதளத்தின் ஊடாக பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்: வாகன இலக்கம் (Vehicle Number) மற்றும் சசி இலக்கம் (Chassis Number) ஆகியவற்றைச் சரியாக உள்ளிட வேண்டும்.

வாகன விபரங்கள் உறுதி செய்யப்பட்டதும், அங்கிருக்கும் 'Override' என்ற தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீங்கள் 'Override' செய்தவுடன், அந்த வாகனத்துடன் இணைக்கப்பட்டிருந்த பழைய தொலைபேசி இலக்கத்திலான கணக்கு தரவுத்தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்படும்.

அதன் பின்னர் உங்களது தற்போதைய புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி வாகனத்தை மீண்டும் பதிவு செய்து புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

தகர்க்கப்படும் அமெரிக்க இராணுவ தளங்கள்! கிளஸ்டர் குண்டுகளால் திணறும் வளைகுடா

தகர்க்கப்படும் அமெரிக்க இராணுவ தளங்கள்! கிளஸ்டர் குண்டுகளால் திணறும் வளைகுடா