எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில், இன்றிரவு (30) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள மாதாந்த எரிபொருள் விலை திருத்தக் கொள்கை அடிப்படையில், சர்வதேச சந்தையின் நிலவரத்தைப் பொருட்படுத்தி, விலை மாற்றம் அறிவிக்கப்படலாம்.
கடந்த சில வாரங்களாக, மத்திய கிழக்கில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள், உலக சந்தையில் எரிபொருள் விலைகளை அதிரடியாக மாற்றியமைத்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வு
இதில், விலை உயர்வும், எரிபொருள் கிடைப்பில் சிக்கலும் ஏற்பட்டது. இந்த வளர்ச்சிகள் இலங்கையின் விலை நிர்ணயத் திட்டத்திலும் நேரடியாக செல்வாக்கு செலுத்தும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், சில எரிபொருள் வகைகளில் விலை உயர்வுக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், எரிபொருள் விலை உயரக்கூடும் என்ற அச்சத்தில், நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் வரிசையில் காத்திருக்கும் படங்கள் கடந்த சில நாட்களாகவே பரவலாக காணப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ விலை மாற்ற அறிவிப்பு இன்று நள்ளிரவு அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |